Press "Enter" to skip to content

அமீருக்கு வலுக்கும் ஆதரவு…! – கரு.பழனியப்பன் அறிக்கை

இயக்குநர் சீனுராமசாமி, நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. இதுகுறித்து திரைப்படம் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சீனுராமசாமி குறித்து போட்ட சர்ச்சை பதிவுகள் என்ன? திரிஷா விசித்ரா இவர்களைத் தொடர்ந்து மனிஷா யாதவுக்கு நடந்தது .?

இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:- 

திரிஷாவுடன் கற்பழிப்பு காட்சியில் நடிக்க முடியவில்லையே என ஏக்கத்தை வெளிப்படுத்தி சிறைக்கு செல்லும் அளவுக்கு சென்று மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அதே போல 20 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் தன் அறைக்கதவைத் தட்டி, படுக்கைக்கு அழைத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா பேசிய பேச்சுக்கள் பரபரப்பு தீயை பற்ற வைத்தன. 

இவ்வாறு திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் புகார்கள் படையெடுத்து வரும் நிலையில் மீண்டுமொரு செய்தி வெளியாகி கோலிவுட்டையே கிடுகிடுக்க வைத்துள்ளது. 

வலைப்பேச்சு என்ற யூ-டியூப் தளத்தில் பிஸ்மி அளித்த பேட்டியில், இயக்குநர் சீனுராமசாமியால் நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் திரையுலகை விட்டு ஒதுங்கியதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.  

கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சீனுராமசாமி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அடையாளம் பெற்றார். இதைத் தொடர்ந்து நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். 

தற்போது தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், 2013-ம் ஆண்டு தயாரான இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. 

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஆகியோர் நடித்த இடம் பொருள் ஏவல் படத்தில் பிரபல நடிகை மனிஷா யாதவ் ஓர் முக்கிய வேடத்தில் நடித்ததாகவும், இந்த படப்பிடிப்பின்போது, இயக்குநர் சீனுராமசாமி மனிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்த மனிஷா, வழக்கு எண் 18-ன் கீழ் 9, ஆதலால் காதல் செய்வீர், ஒரு குப்பைக் கதை படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை பிந்துமாதவியும், சீனுராமசாமியால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி பின்னர் தலைதெறிக்க ஓடியதாகவும் கூறியுள்ளார். 

இந்த செய்திகள் சமூகவலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி தமிழ்த் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இந்த காணொளி சிறிது நேரத்திலேயே வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதோடு சீனுராமசாமி, தன் எக்ஸ் தள பக்கத்தில், திரைப்படத்தை விட்டே சென்றதாக கூறப்படும் மனிஷா யாதவ் மீண்டும் தன் படத்தில் நடிப்பார் என குறிப்பிட்டார். 

இதுகுறித்து திரைப்படம் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பரபரப்பு டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.  அதில் சீனுராமசாமியை, சக்கரை ராமசாமி என குறிப்பிட்டு, நீ மாமனிதன் இல்லை.. மாமா மனிதன் என்றும், சக்கரை ராமசாமி, திரையுலக நித்யானந்தாவும், தோலை உரிச்சிட வேண்டியதுதான் என்றும் பதிவிட்டார். 

ஆக, திரையுலகில் முக்கிய பிரபலங்களால் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளான செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், இதனை கவனிக்கும் இணையப் பயனாளர்கள், கோலிவுட்டுக்கு என்னதான் ஆச்சு? இன்னும் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறுமா என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »