Press "Enter" to skip to content

கனவு வாரியம்…. வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்ப் படம்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் முதல்முறையாக தமிழ்ப் படம் ஒன்றை வெளியிடுகிறது.

 

அறிமுக இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கி நடித்த படம், கனவு வாரியம். தமிழகத்தில் நிலவிய மின்வெட்டுப் பிரச்சனையை மையமாக வைத்து இவர் இயக்கிய இந்தப் படம் சர்வதேச அளவில் 7 விருதுகளை வென்றுள்ளது.

இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் வாங்கி தமிழகத்தில் வெளியிடுகிறது. வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தென்னிந்திய திரைப்படம் இது. சர்வதேச விருதுகள் பெற்றதால் இந்த படம் ஆவணப்பட தன்மையுடன் இருக்கும் என்று பயப்பட வேண்டாம். காதல், காமெடி என இந்தப் படத்தை அருண் சிதம்பரம் ஜனரஞ்சமாக உருவாக்கியுள்ளார்.

செய்திகள்

Source: Webdunia.com

Mission News Theme by Compete Themes.