3 மாதங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை இருக்கும் : ஆட்சியர் வீரராகவராவ் நம்பிக்கை

மதுரை: அடுத்த 3 மாதங்களுக்குள் மதுரை மாவட்டத்தில் பிச்சைக்காரர்களே இல்லாத நிலை உருவாக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலெக்டர் வீரராகவராவிற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவித்தார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவராவ், குடியரசுத் தலைவர் விருது வழங்கியது மகிழ்ச்சியான தருணம் என்றார்.

கடந்த நிதியாண்டில் ரூ.35 கோடி மதிப்பிலான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நடப்பாண்டில் ரூ.14 கோடியே 37 லட்சம் ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இன்னும் 3 மாதங்களில் மதுரை மாவட்டம் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றியும் கிடைக்கும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.

Source: Dinakaran

English summary
3 months in the absence of the beggars District Collector of Madurai: veeraragavarao hope

Madurai: within the next 3 months with the same absence of beggars in Madurai district