தேர்தல் வெற்றி வழக்கு: அமைச்சர் சரோஜா மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

image

 ராசிபுரம் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் சரோஜா தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு மே 16-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் வி.சரோஜா, திமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, பிஜேபி சார்பில் சி.குப்புசாமி, மக்கள் நலக்கூட்டணி சார்பில் விசிக கட்சி வேட்பாளர் ஜி.அர்ஜுன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் சரோஜா 86,901 வாக்குகளும், இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் துரைசாமி 77,270 வாக்குகளும் பெற்றதையடுத்து, 9631 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக சார்பில் சரோஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பணப் பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து சரோஜா பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வி.பி.துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தனது வெற்றி நியாயமானது என்பதால் தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் சரோஜா மனுத்தாக்கல் செய்தார். அமைச்சர் சரோஜா மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிபதி, தேர்தல் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source: The Hindu

English summary
Electoral success case: Minister High Court dismissed the petition, saroja

Rasipuram constituency victory was against case niragarani