பழைய நோட்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அல்லது 5 மடங்கு அபராதம்

பழைய நோட்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அல்லது 5 மடங்கு அபராதம்

ரூ. 500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வருகின்ற 30-ந்தேதிக்குப்பின் வங்கியில் செலுத்த முடியாது. அன்றைய தினத்தில் இருந்து அந்த நோட்டுக்கள் செல்லாது. அது வெறும் காகிதம்தான்.

அதன்பிறகு அந்த பணத்தை கையில் வைத்திருப்பவர்கள் கடும் அபராதத்திற்கு உள்ளாவார்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது இதுகுறித்து எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை. வரும் புதன்கிழமை மத்திய மந்திரி சபை கூட இருக்கிறது. அதன்பின் முழு விவரம் தெரியவரும்.

தற்போது வெளிவந்த தகவல் அடிப்படையில் ஒவ்வொருவரும் பழைய 1000 மற்றும் 500  ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க கூடாது. அப்படி மீறி வைத்திருந்தால் அவர்கள் விதியை மீறியதாக கருதப்படுவார்கள். விதியை மீறினால் அவர்களுக்கு குறைந்தது 50  ஆயிரம் அல்லது கூடுதலாக வைத்திருக்கும்  பணத்தின் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாக வில்லை.

30-ந்தேதிக்குப்பின் மார்ச் மாதம் வரை சரியான காரணத்தை கூறிவிட்டு ரிசர்வ் வங்கியில் பணம் செலுத்தலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 3 மாத கால அவகாசம் குறைய வாய்ப்பு உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Maalaimalar

Author Image
murugan