மேலும் 200 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி: சுரேஷ் பிரபு தகவல்

மேலும் 200 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி: சுரேஷ் பிரபு தகவல்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தின் சில ரெயில் நிலையங்களில் வை-பை வசதி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வை-பை வசதியை தொடங்கி வைத்தார்.

கன்னூர், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் பகுதிகளில் 6 இடங்களில் வை-பை வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் பிரபு, இந்த ஆண்டில் மட்டும் 100 ரெயில்வே நிலையங்களில் வை-பை வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ”2017-ம் ஆண்டு மேலும் 200 ரெயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும். இதன் நோக்கம், சிறிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்துவதாகும். அதேபோல், ரெயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அம்மாநில பொதுத் துறை அமைச்சர் சுதாகரன் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Source: Maalaimalar

Author Image
murugan