மம்தா பேனர்ஜியை தமிழ்நாடு முதல்வர் என உளறிய ராம மோகன் ராவ்!!

மம்தா பேனர்ஜியை தமிழ்நாடு முதல்வர் என உளறிய ராம மோகன் ராவ்!!

சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறிய ராம மோகன் ராவ் மம்தா பேனர்ஜியை தமிழக முதல்வர் என கூறி உளறினார்.

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி ரெய்டு நடத்தினர். விடிய விடிய 25 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ரெய்டில் பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ள தலைமைச் செயலார் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து அவர் தலைமைச் செயலாளராக நீடிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்

இந்நிலையில் ராம மோகன் ராவ் இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அப்போது ‘ஐ வான்டட் டூ தேங்க் மேடம் மம்தா பானர்ஜி-தமிழ்நாடு சிஎம்’ என்றார். பிறகு சுதாரித்துக் கொண்டு மேற்கு வங்க முதல்வர் என தெரிவித்தார்.

மேடம் என்றதும் ராமமோகன ராவுக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு வந்திருக்கும் என பத்திரிகையாளர்கள் கமெண்ட் அடித்தனர்.

Source: OneIndia

Author Image
murugan