Press "Enter" to skip to content

ஜி.கே.வாசனுக்கு நாளை பிறந்த நாள்… த.மா.கா சார்பில் ரத்த தான முகாம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவ்ர ஜி.கே.வாசனின் 52வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரத்த தான முகாம் நடத்த அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் 52 வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி சார்பில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைக்கவுள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.