வணிகர்களுக்கு சிறப்பு செயலி அறிமுகம் செய்த ஐசிஐசிஐ

வணிகர்களுக்கு சிறப்பு செயலி அறிமுகம் செய்த ஐசிஐசிஐ

மும்பை:

தனியார் வங்கி சேவையை வழங்கி வரும் ஐசிஐசிஐ, இந்தியாவில் முதல் முறையாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஈஸிபே (Eazypay) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயலி வியாபாரம் செய்பவர்களுக்கு பயன்தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வணிகர்கள் ஈஸிபே செயலியை பயன்படுத்திமொபைல் மற்றும் இதர டிஜிட்டல் முறைகளில் பணத்தை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) சார்ந்து இந்த செயலி வேலை செய்கிறது. 

அதாவது யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் என்பது வெவ்வேறு வங்கி கணக்குகளை ஒற்றை செயலி மூலம் பண பரிமாற்றங்களை செய்ய முடியும். இதில் கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். 

ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த ஈஸிபே செயலியை டவுன்லோடு செய்து உடனடியாக பயன்படுத்த முடியும். மேலும் மற்ற வங்கியில் கணக்கு வைத்திருப்போரும் இந்த செயலியை உடனடியாக பயன்படுத்த முடியும் என ஐசிஐசிஐ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source: Maalaimalar

Author Image
murugan