டெல்லி மெட்ரோ ரெயிலை மிரட்டும் பெண் கொள்ளையர்கள்

டெல்லி மெட்ரோ ரெயிலை மிரட்டும் பெண் கொள்ளையர்கள்

புதுடெல்லி:

டெல்லியில் ரெயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூடும்  இடங்களில் கொள்ளை அடிப்பதை கொள்ளையர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சமீபகாலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் கொள்ளையடிப்பதில் இறங்கி வருகின்றனர்.

டெல்லியின் மெட்ரோ ரெயில்களில் இந்த ஆண்டு பிடிபட்ட கொள்ளையர்களில் 91% பெண்கள் என மத்திய பாதுகாப்பு படையினர்(CISF) தகவல் வெளியிட்டுள்ளனர். 2016-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை சுமார் 479 பேர் மத்திய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 438 பேர் பெண்கள் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக டெல்லியில் பெண் கொள்ளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மெட்ரோ ரெயிலில் கணவனுடன் பயணித்த அமெரிக்க வாழ் இந்திய பெண்ணை மிரட்டி பணம், தங்கநகைகள் பறித்ததாக பெண் கொள்ளையர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Author Image
murugan