Press "Enter" to skip to content

சியோமி Mi 6: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

பீஜிங்: 

இந்த ஆண்டு சியோமி வெளியிட்ட Mi 5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான Mi 6 அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே வெளியிடப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி புதிய Mi 6 2017, பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.    

உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று சியோமி Mi 6 வெளியிடப்படலாம் என வெய்போ தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 4K திரை 4096×2160 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.5 – 2.7 ஜிகாஹெர்ட்ஸ் 16 கோர் கொண்ட பிராசஸர் மற்றும் 23 எம்பி பிரைமரி கேமராவும், 7 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம். மெமரியை பொருத்த வரை 32GB, 64GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், குவிக் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் திறன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்றும் அதிக பாதுகாப்பினை உறுதி செய்யும் ரெட்டினா ஸ்கேனர் அம்சமும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »