ஷீலா தீட்சித் விசாரணைக்கு தயாராக இருக்கிறார், மோடி ஏன் தயங்குகிறார்: ராகுல் கேள்வி

புதுடெல்லி:

டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, அப்போது கூறியதாவது:-

“ குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால்  விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று கூறும் முதல் நபராக பிரதமர் இருக்க வேண்டும். ஷீலா தீட்சித் விசாரணைக்கு தயாராக இருக்கிறார். பிரதமர் ஏன் தயராக இல்லை? டைரிகள் நீதிமன்றம் கண்காணிப்பில் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். தீர்ப்புக்கும்  கண்காணிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது. அந்த டைரிகள் தொடர்பாக எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை” என்றார்.

முன்னதாக, மோடி உட்பட சில அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சில கார்பரேட் நிறுவனங்கள் குறிப்பிட்டு இருந்தது பற்றி ஏன்? பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்று ஷீலா தீட்சித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

கார்பரேட் நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்த டைரி ஒன்று சிக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதில்,  பிரதமர் மோடி, உத்தரபிரதேச காங்கிரஸ் முதல் மந்திரி வேட்பாளர் ஷீலா தீட்சித், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்று இருந்தது.

Source: Maalaimalar