Press "Enter" to skip to content

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவராக சுரேஷ் கல்மாடி, சவுதாலா நியமனம்

புதுடெல்லி:

இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் வருடாந்திர பொது கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபேசிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் இது கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. முன்னாள் காங்கிரஸ் அமைச்சரான சுரேஷ் கல்மாடி காமன்வெல்த் ஊழலில் சிக்கியவர். அபய் சவுதாலா மீதும் விளையாட்டு தொடர்பான ஊழல் புகாரில் சிக்கியவர்கள்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழலில் அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு ஏற்பட்டதாக போட்டி அமைப்பு குழு தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டார்.

இந்த குற்றச்சாற்று தொடர்பாக சுரேஷ் கல்மாடி மற்றும் 9 பேர் மீது சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி சுமார் 10 மாத காலம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

அதேபோல், 2012-14 வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக அபே சிங் சவுதாலா இருந்தார். பின்னர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 2014-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த அறிவிப்புக்கு மத்திய விளையாட்டுத் துறை மந்திரி விஜய் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த தீர்மானம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்றார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.