தமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் நடந்த சாலை விபத்து : 5 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம்: தமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் நடந்த சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே பனிமூட்டத்தால் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அச்சிறுப்பாக்கம் அருகே அரப்பேடு என்ற இடத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பக்தவாசலம் என்பவரும் மற்றொரு இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே இரட்டை ஏரி என்ற இடத்தில் கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். அதேபோல் பெரம்பலூர் அருகே கல்பாடியில் கார் மோதி சாலையை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர்.

Source: Dinakaran

English summary
In Tamil Nadu, fog and smoke by bogey five fatal road accident:

Smoke and fog in the State of Tamil Nadu, maduranthakam: bogey walked 5 people were killed in road accidents. Madhuranth

Facebook Comments