Press "Enter" to skip to content

கொச்சி, திருவனந்தபுரம் ஏர்போர்ட் பெயரிலான இணையதளங்களை ஹேக் செய்த பாக். கும்பல்

கொச்சி: கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களின் பெயரிலான அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் ஹேக் செய்தனர்.

கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் பெயரில் தனிநபர்களால் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த இணையதளங்களை பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். இணையதளத்தை ஹேக் செய்தது காஷ்மீரி சிறுத்தைகள் என்று அந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டின் புகைப்படமும் அவற்றில் வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கொச்சி விமான நிலையம் பெயரிலான இணையதளம் சீரமைக்கப்பட்டது.

பாகிஸ்தானிய ஹேக்கர்கள் இந்திய விமான நிலைய இணையதளங்களை ஹேக் செய்து இது புதிது அன்று.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.