ரூ.25 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை துபாய்க்கு கடத்த முயன்றவர் கைது

மும்பை:

மும்பையில் இருந்து இன்றுகாலை துபாய் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏறவந்த பயணிகளை மும்பை விமான நிலைய அதிகாரிகள் மிக தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த ஆரிப் கோயன்ட்டே என்பவரின் கைப்பைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, உள்ளே ரெடிமேட் ஆடைகளுக்கு மத்தியில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்ட கட்டுகளாக 25 லட்சம் ரூபாயை 52 உறைகளில் அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்தும் ஆரிப்பை கைது செய்த அதிகாரிகள் அவர்மீது கள்ளத்தனமான பணப்பரிமாற்ற சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Source: Maalaimalar