2016: மக்கள் வரவேற்பை பெற்ற டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

2016: மக்கள் வரவேற்பை பெற்ற டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

புதுடெல்லி:

ஒவ்வொரு ஆண்டும் உலக ஸ்மார்ட்போன் சந்தையின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் ஸ்மார்ட்போன்களை அதிகம் வாங்கி பயன்படுத்துவது தான் எனலாம். எல்லோருக்கும் மிகவும் அத்தியாவசிய தேவை என்றாகிவிட்ட ஸ்மார்ட்போன்கள் நமக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது. 

இந்த ஆண்டு முழுக்க எக்கச்சக்க ஸ்மார்ட்போன்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அவை அனைத்தும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. இங்கு மக்களிடம் வரவேற்பை பெற்றதோடு உலக சந்தையில் பிரபலமாகி, நன்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் டாப் 5 பட்டியலை பார்ப்போம்…

ஒன்பிளஸ் 3T: 

இந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன்பே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டது. சீரான வேகம், தரமான வடிவமைப்பு, கேமரா போன்ற அம்சங்கள் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சியோமி ரெட்மி 3s பிரைம்:

 

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 3s பிரைம் ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சமும் வழங்கப்பட்டது. 5.0 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன் மெட்டல் வடிவமைப்பு மற்றும் சிறப்பான கேமரா வழங்கப்பட்டுள்ளன. ரூ.8,999 என்ற விலைக்கு தலைசிறந்த அம்சங்களை சியோமி ரெட்மி 3s பிரைம் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி S7:

மெட்டல் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு கொண்ட சாம்சங் கேலக்ஸி S7 ஸ்மார்ட்போனின் கேமரா அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்குகிறது. வளைந்த எட்ஜ் வடிவமைப்பு, ஃபுல் எச்டி தரம் கொண்டுள்ள தலைசிறந்த ஃபிளாக்‌ஷிப் போனான கேலக்ஸி S7 சக்திவாய்ந்த வன்பொருள், வாட்டர் ப்ரூஃப் வசதி மற்றும் டூயல் சிம் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.   

கூகுள் பிக்சல் XL:

உலக சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கூகுள் பிக்சல் தான் எனலாம். ஆப்பிள் ஐபோன்களுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் படி இருந்தது. புதிய ஆண்ட்ராய்டு சுவையுடன், கூகுள் பிரத்தியேக சேவை மற்றும் தலைசிறந்த வடிவமைப்பு உள்ளிட்டவை சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன்களின் கேமராக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 பிளஸ் இரட்டை கேமராக்களுடன் வெளியானது கேமரா ப்ரியர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. இத்துடன் வாட்டர் ப்ரூஃப் வசதி, ஹெட்போன் ஜாக் இல்லாத வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Source: Maalaimalar

Author Image
murugan