Press "Enter" to skip to content

உ.பி. உள்பட 5 மாநில தேர்தல் அட்டவணை 4-ந்தேதி அறிவிப்பு?

403 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்தியாவின் மிப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு முதலில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதோடு பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி அனைத்து வேலைகளையும் தேர்தல் கமிஷன் செய்து வந்தது. ஐந்து மாநிலத்திற்கும் நேரில் சென்று தேர்தல் நடத்துவற்கான முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது அனைத்து வேலைகளையும் முடித்து தேர்தல் நடத்த தயாராகிவிட்டது. இந்நிலையில் இன்று அந்த ஐந்து மாநிலத்தின் கேபினட் செயலாளர்கள் மற்றும் தலைமை செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இருக்கிறது. அதனால் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால் புத்தாண்டு விடுமுறை முடிந்த பின்னர் ஜனவரி 4-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும் மற்ற மாநிலங்களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் சட்டசபை பதவிக் காலம் மே 27-ந்தேதியுடனும், மற்ற நான்கு மாநிலத்தின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதத்துடனும் முடிவடைகிறது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.