இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம்: அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம்: அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால் அமெரிக்கர்கள் அங்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வாஷிங்டன்:

‘விசா’ தடை சட்டத்தில் சிறிது மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஏற்கனவே தடை விதித்திருந்த 7 முஸ்லிம் நாடுகளில் ஈராக்குக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஈரான், சிரியா, லிபியா உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்ந்து ‘விசா’ தடை பட்டியலில் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், “தெற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல் நடத்த தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளன.

எனவே, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு எதிரான அபாயகரமான தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் உள்ளன.

இந்தியாவிலும் தீவிரவாத குழுக்கள் உள்ளன. வங்காள தேசத்திலும் அவர்கள் உள்ளனர். எனவே அந்நாடுகளிலும் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

எனவே இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Author Image
murugan