சீனாவிற்கு 525 மில்லியன் யுவான் கடன் வழங்கிய பிரிக்ஸ் வங்கி

ஷாங்காய்: பிரிக்ஸ் வங்கி தன்னுடைய முதல் வங்கிக் கடனாக சுமார் 525 மில்லியன் யுவான் அதாவது 75.6 பில்லியன் டாலர் பணத்தை சீனாவின் ஷாங்காய் லிங்கிங் ஹாங்பூ என்ற நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில் மயமாகிவரும் நாடுகள் ஆகும்.

இந்த உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பில் முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உட்பட நான்கு நாடுகளே இடம் பெற்று இருந்தன. பின்னர் 2010ஆம் ஆண்டு டிசம்பர் 24ல் தென்னாப்பிரிக்காவும் இந்த கூட்டமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டது.

ஐந்து நாடுகளும் சேர்ந்து தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ர்சிக்காகவும் நிதி சீரமைப்பிற்காகவும் வளர்ச்சிக்காக உருவாக்கிய அமைப்பு கூட்டமைப்பு பிரிக்ஸ்(BRICS) என்ற அமைப்பாகும்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளிள் நடைபெறவது வழக்கம். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் தங்கள் நாடுகளில் தொழில் வளர்ச்சி மற்றும் நிதித்தேவைகளுக்காக 100 பில்லியன் டாலர் முதலீட்டில் ஒரு வளர்ச்சி வங்கி ஒன்றும் ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.

இந்த வங்கிக்கு தி நியூ டெவலப்மெண்ட் பேங்க் என்று பெயரிடப்பட்டது. இந்த வங்கியானது சீனாவில் உள்ள ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

பிரிக்ஸ் வங்கி தன்னுடைய முதல் வங்கிக் கடனாக சுமார் 525 மில்லியன் யுவான் அதாவது 75.6 பில்லியன் டாலர் பணத்தை சீனாவின் ஷாங்காய் லிங்கிங் ஹாங்பூ என்ற நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் போட்டுள்ளது, இந்த நிறுவனம் ஒரு சூரிய மின்சார உற்பத்தி நிறுவனமாகும்,

இந்த நிறுவனம் சாங்காயில் புதிதாக 100 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் தொடங்குவதற்காகவே இந்த கடன் வாங்குவதாக தி நியூ டெவலப்மெண்ட் பேங்க் தெரிவித்துள்ளது.

மேலும், தி நியூ டெவலப் பேங்க் தொடங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போதே, முதலில் இந்தியாவில் தொடங்க முடிவானது. ஆனால், சீனா தன்னுடைய ஆதிக்கத்தினால், தன்னுடைய நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என்று உறுதியாக நின்றது. இதில் குறிப்பிடவேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், வங்கி ஆரம்பிக்க வழங்கப்பட்ட மொத்த முதலீட்டில் சுமார் 75 சதவீதத்தை சீனா நிறுவனம் கடனாக தட்டிச்சென்றுவிட்டது.

Source: OneIndia