இதான் உங்க டக்கா.. மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொலை.. மோடிக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய சுறுசுறு கடிதம்

இதான் உங்க டக்கா.. மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொலை.. மோடிக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய சுறுசுறு கடிதம்

சென்னை: நேற்று இரவு ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொள்ளப்பட்டதற்கு தற்போதுதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொள்ளப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு, இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்போது இலங்கை தூதரிடம் தமிழக அரசின் உணர்வை தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பாக் நீரிணையில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு பாரம்பரிய உரிமை உள்ளது என்பதை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர், மீனவர் உரிமையை நிலைநாட்ட உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Source: OneIndia

Author Image
murugan