ஒரே நாளில் உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார்? மாஜி அமைச்சரின் டெரர் கேள்வி

சென்னை: ஜெயலலிதாவின் உடலில் இருந்து 7 நாட்களுக்குப் பின் எடுக்க வேண்டி ஒரே நாளில் உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார் எனன முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அனுமதியளித்த ரத்த உறவுகளுக்கு எந்த மாதிரியான ஆதாரங்கள் வழங்கப்பட்டன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கக்கோரி நாளை ஓபிஎஸ் அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. 36 இடங்களில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் யார் யார் தலைமை ஏற்கிறார்கள் என்பது குறித்த பட்டியலை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் உடலில் இருந்து உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரைவிட்டது யார் எனன முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது,

டிஸ்சார்ஜ் அறிக்கையை வெளியிடனும்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைக்கும், தற்போது வெளியாகியுள்ள அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா கீழே விழுந்தாரா என்பதை அறிய அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையை வெளியிட வேண்டும்.

7 நாட்கள் பொருத்தப்பட்டிருக்கும்

7 நாட்கள் பொருத்தப்பட்டிருக்கும்

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்கக்கோரி 36 இடங்களில் உண்ணாவிரதம் நடக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் கருவி ஏழு நாட்கள் பொருத்தப்பட்டிருக்கும் என அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் எடுக்க உத்தரவிட்டது யார்?

ஒரே நாளில் எடுக்க உத்தரவிட்டது யார்?

ஆனால் ஒரே நாளில் உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார்? அதற்கு அனுமதி அளி்த்த ரத்த உறவு என்பதற்கு எம்மாதிரியான ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

விசாரணை நடத்தப்பட வேண்டும்

விசாரணை நடத்தப்பட வேண்டும்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதி விசாரணை வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசினார்.

Source: OneIndia