Press "Enter" to skip to content

கிரெஸ்ஸோ நோக்கியா 3310 விலை ரூ.1.5 லட்சம்: அம்சங்கள் என்னென்ன?

கிரெஸ்ஸோ வடிவமைத்த நோக்கியா 3310 பீச்சர் போன் 2,290 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,52,709 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

புதுடெல்லி:

நோக்கியா 3310 சுப்ரிமோ புதின் பதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1,13,500க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கிரெஸ்ஸோ ஆடம்பர போன் பிராண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள நோக்கியா 3310 பீச்சர் போன் 2,290 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,52,709 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கிரெஸ்ஸோ 3310 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆடம்பர பீச்சர் போன் கிரேடு 5 டைட்டானியம் ஷெல் மற்றும் கீபேட் கொண்டுள்ளது. இத்துடன் 3 எம்பி பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.  

சுமார் 32 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் தாங்கும் படி உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ள கிரெஸ்ஸோ நோக்கியா 3310 பீச்சர் போனில் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கும் இந்த பீச்சர் போன்கள் குறைந்தளவு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு கொண்ட நோக்கியா 3310 சில வாரங்களுக்கு முன் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒற்றை சிம் மற்றும் இரண்டு சிம் ஸ்லாட் கொண்டுள்ள இரு மாடல்கள் வெளியிடப்பட்டன. இரு மாடல்களிலும் 2.1 இஞ்ச் QVGA டிஸ்ப்ளே, 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரியும்,  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 1200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த போன் நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »