விஜயகாந்த் 'தொகுதி' தேமுதிக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்! கேப்டன் கப்பலில் மற்றொரு ஓட்டை!!

விருத்தாசலம்: விஜயாந்த் வெற்றி வெற்ற முதல் தொகுதியான விருத்தாசலம் தொகுதியின் எம்எல்ஏ முத்துக்குமார் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

கடந்த 2006-இல் புதிய கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு விருத்தாசலம் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கட்சியின் வாக்கு சதவீதமும் கணிசமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த், பள்ளி மற்றும் பேருந்து உரிமையாளரான முத்துக்குமாரை விருத்தாசலத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

அப்போது வெற்றி பெற்ற அவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி சார்பில் தேமுகவில் போட்டியிட்ட முத்துகுமார் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் முத்துக்குமார் தனது ஆதரவாளர்களுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.ஆரணி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல் அதிமுகவின் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்ததற்கு தேமுதிகவிலிருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia