இலங்கை கடற்படை மீது “302” வழக்கு.. கைது செய்ய கோரி டிஜிபியிடம் வேல்முருகன் மனு

சென்னை: ராமேஸ்வர மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்ற புகார் மனு ஒன்றை டிஜிபியிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்துள்ளார்.

இன்று காலை டிஜிபி அலுவலகம் சென்ற வேல்முருகன் புகார் மனுவி டிஜிபியிடம் ஒப்படைத்தார். காவல்துறை இயக்குனரிடம் வேல்முருகன் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

06-03-2017 அன்று இரவு இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இப்படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினர் அனைவரது மீதும் தமிழக காவல் துறையின் மூலம் 302 கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் இந்த படுகொலை சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்திய படகை பறிமுதல் செய்யவதற்கும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

Source: OneIndia