Press "Enter" to skip to content

உ.பி.யில் தனித்து களமிறங்குகிறது சமாஜ்வாடி: 325 வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும்.

தேர்தலுக்கான அனைத்து வேலைகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்தாகிவிட்டது. அடுத்த மாதம் 4-ந்தேதி வாக்கில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். இதற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற எம்.பி. தேர்தலில் பா.ஜனதா 70-க்கும் மேற்பட்ட இடங்களை உ.பி.யில் கைப்பற்றியது. இதனால் உ.பி.யில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று அக்கட்சி முயற்சி செய்து வருகிறது.

இரண்டு கட்சிகளுக்கிடையில் முன்னாள் முதல்வர் மாயாவதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முழுவீச்சில் களம் இறங்கியுள்ளன.

பீகார் மாநிலத் தேர்தலில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று நிதிஷ் குமார், லாலு மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பா.ஜனதாவை வீழ்த்தினார். இதேபோல் உ.பி.யிலும் முலாயம்சிங் காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்தான் முலாயம் சிங் 403 சட்டசபை இடங்களை கொண்ட உ.பி.யில் 325 இடங்களுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளார். இதில் ஏற்கனவே 176 பேர் தற்போது எம்.எல்.எ.வாக இருக்கிறார்கள்.

இதன்மூலம் உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனியாக களம் இறங்கிறது என்பது தெரியவந்துள்ளது.

முன்னதா அகிலேஷ் யாதவ் ஒரு வேட்பாளர் பட்டியலை தயாரித்து முலாயம் சிங்கிற்கு அனுப்பியிருந்தார். அதில் பெரும்பாலானோர் பெயர் இன்றைய பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.