அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் மீது வழக்கு !

அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் மீது வழக்கு !

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் மீது ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவிகளின் கீழ் சசிகலா புஷ்பா கணவர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தாக வேண்டும் என தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று தகவல் வெளியானது.

இதையடுத்து சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்தார். அப்போது தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சசிகலா புஷ்பாவின் கணவரும் தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பா கணவர் மீது ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதிமுக பிரமுகர் சிந்துரவி என்பவர் அளித்த புகாரின் பேரில் லிங்கேஸ்வர திலகர் உள்பட 10 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: OneIndia

Author Image
murugan