Press "Enter" to skip to content

வீடு, கார் கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் 90 நாட்களாக நீட்டிப்பு

புதுடெல்லி:

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.

இதனையடுத்து, தொடர்ச்சியாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. இதுவரை சுமார் 50 அறிவிப்புகளுக்கு மேல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், வீடு, கார், விவசாயம் உள்ளிட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 90 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கனவே இதற்கான கால அவகாசம் 60 நாட்களாக நீட்டிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இந்த அறிவிப்பு செல்லும். இந்த அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.