Press "Enter" to skip to content

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் தொழிலதிபர் ரத்தன் டாடா திடீர் சந்திப்பு

மும்பை:

டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக உள்ள தொழிலதிபர் ரத்தன் டாடா ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நேற்று திடீரென சந்தித்தார்.

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது ரத்தன் டாடா உடன் பா.ஜ.க. பொருளாளரும், ஆடை வடிவமைப்பாளருமான ஷியானா இருந்தார்.

மோகன் பகவத் உடனான ரத்தன் டாடாவின் சந்திப்பு 25 நிமிடங்கள் வரை நீடித்தது. முன்னதாக ஆர்.எஸ்.எஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் ஸ்மிரிதி மந்திர்க்கு ரத்தன் டாடா சென்றார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதை ரத்தன் டாடா தவிர்த்து விட்டார். இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Source: Maalaimalar

Mission News Theme by Compete Themes.