Press "Enter" to skip to content

எம்ஜிஆர் உருவாக்கி… ஜெ., கட்டிக்காத்த அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்? இன்று தெரியும்?

சென்னை: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக கடந்த 27 ஆண்டுகளாக ஜெயலலிதா இருந்து வந்தார். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று டிசம்பர் 5ம் தேதி வரை கூறி வந்தவர்கள் இன்றைக்கு சசிகலாவை பொதுச்செயலாளராக பதவியேற்க அழைக்கின்றனர்.

அம்மாவின் மீதுள்ள அன்பினால் அப்படி அழைத்தோம் என்கிறார் பொன்னையன். ஜெயலலிதாவை வைத்து பார்த்த இடத்தில் சசிகலா? அதெல்லாம் செல்லாது என்று சொல்லாமல் சொல்கின்றனர் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள்.

அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் அதன் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். ஆட்சியைப் பிடிக்கும் வரை அந்தப் பதவியில் இருந்த அவர், முதலமைச்சரான பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பான பொதுச்செய லாளர் பதவியைத் ப.உ.சண்முகத்திடம் கொடுத்தார். பிறகு, மூத்த அமைச்சரும் எம்ஜிஆரின் மதிப்புக்குரியவருமான நாவலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தார். அடுத்து, அந்தப் பதவியை மூத்த தலைவர் ராகவானந்தத்திடம் கொடுத்தார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் – ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் தனது மறைவுக்கு முன்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார். எம்ஜிஆரின் காலத்தில் பெரும்பாலும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடமே இருந்தது. ஆனால் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக வந்த பின்னர் கட்சித் தலைமையும் ஆட்சி அதிகாரமும் ஜெயலலிதா வசமே இருந்தது.

அமாவாசையில் பொதுக்குழு

அமாவாசையில் பொதுக்குழு

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நேற்று இரவே சென்னையில் தஞ்சம் அடைந்தார்கள். அமாவாசை மதியம் வரையில்தான் உள்ளது. நல்ல நேரம் 10.45 முதல், 11.45 வரை உள்ளது. அதாவது அறுபது நிமிடம்தான் நல்ல நேரம். அதற்குள் பொதுக்குழுவை முடிக்க நினைக்கிறார் மதுசூதனன். எனவேதான் நேற்று இரவே அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து சொகுசு ஓட்டல்களில் தங்க வைத்தனர்.

சொகுசு பேருந்துகளில் பயணம்

சொகுசு பேருந்துகளில் பயணம்

பொதுக்குழு உறுப்பினர்கள் காலை 7.30 மணிக்கே பொதுக்குழு மண்டபத்திற்கு ஆம்னி பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டார்கள். அதே பேருந்தில்தான் மாவட்டச் செயலாளர்களும் சென்றார்கள். அதற்கு முன்பாக மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம்

ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம்

ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பொதுக்குழுவில் யாரும் பேச மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறங்கல் தீர்மானம் நிறைவேற்றபடுகிறது . முதல் தீர்மானமாக, அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட சசிகலாவை, அ.இ.அ.தி.மு.க,வுக்கு பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்கவேண்டும் என்று இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

சசிகலாவிற்கு தீர்மானம்

சசிகலாவிற்கு தீர்மானம்

பொதுக்குழு முடிந்ததும் மதிய உணவை முடித்து விட்டு தீர்மானத்தின் நகலை மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு எடுத்துசென்று சசிகலாவிடம் கொடுத்து, கட்சிக்கு தலைமையேற்று, தொண்டர்களையும், அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட செயலாளர்களையும், மொத்தத்தில் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி நல்லாட்சி கொடுக்க முதல்வராக பொறுப்பு ஏற்கச் சொல்லி வலியுறுத்த இருப்பதாக சொல்கிறார்கள் பொதுக்குழு உறுப்பினர்கள்.

சசிகலாவிற்கு நேரடி ஒளிபரப்பு

சசிகலாவிற்கு நேரடி ஒளிபரப்பு

தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சி பொதுக்குழுவிற்கு சசிகலா வரமாட்டார் என்றும் அவர் கட்சியின் பொதுக்குழுவை போயஸ் கார்டனிலிருந்து லைவாக பார்க்க ஜெயா டிவி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதாவினால் 30 ஆண்டு காலமாக கட்டி காக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் இல்லாமலேயே இன்று கூடுகிறது. அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார் என்பது இன்றும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »