அதிமுக பொதுச்செயலாளராக ஜன.2ல் பொறுப்பேற்கிறார் சசிகலா?

அதிமுக பொதுச்செயலாளராக ஜன.2ல் பொறுப்பேற்கிறார் சசிகலா?

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 2ம் தேதி அதிமுகவின் தலைமைப் பொறுப்பை எற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவின் தலைமையின் கீழ் கட்சிப்பணியாற்றவும் கட்சியின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 2 ஆம் தேதி சசிகலா கட்சியின் தலைமைப் பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Source: OneIndia

Author Image
murugan