Press "Enter" to skip to content

பெண் கொள்ளையர்களுக்கு உதவிய தலைமைக்காவலர் சஸ்பென்ட்

புது டெல்லி:

மெட்ரோ நகரமான டெல்லியில் பெண் கொள்ளையர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் பயணிகளை மிரட்டி பணம், நகை போன்ற உடமைகளை கொள்ளையடிப்பதை பெண் கொள்ளையர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில் மெட்ரோ ரெயிலில் பயணித்த அமெரிக்க வாழ் இந்திய பெண்ணை மிரட்டி அவரிடமிருந்து பணம், நகை போன்ற பொருட்களை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அமெரிக்க வாழ் இந்திய பெண் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பெண்ணிடம் கொள்ளையடித்த பெண் கொள்ளையர்களுக்கு உதவியதாக தலைமைக்காவலர் ஒருவரை டெல்லி போலீசார்  சஸ்பென்ட் செய்துள்ளனர்.சாவரி பஜார் மெட்ரோ நிலைய சிசிடிவி பதிவொன்றில் கொள்ளையடித்ததாக சந்தேகப்படும் பெண்ணுடன், தலைமைக்காவலர் இருக்கும் காட்சியை மத்திய பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த பெண்ணிடம் இருந்து தலைமைக்காவலர் பொருளொன்றை வாங்குவது போல சிசிடிவியில் காட்சிகள் பதிவாகியுள்ளன.இதுகுறித்து சஸ்பென்ட் செய்யப்பட்ட தலைமைக்காவலரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2016-ம் ஆண்டில் கைதான கொள்ளையர்களில் 91% பெண்களே என மத்திய பாதுகாப்பு படையினர்(CISF) சமீபத்தில் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.