ஜெ. மரணத்தில் சந்தேகம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ராமதாஸ் வலியுறுத்தல்!

ஜெ. மரணத்தில் சந்தேகம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் 3 உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் தமக்கு சந்தேகம் இருக்கிறது என்றார். அத்துடன் பிரதமரின் செயலர், தமிழக அரசின் தலைமை செயலர் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய பதில்தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: OneIndia

Author Image
murugan