ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய பள்ளி நிர்வாகி.. நெல்லை அருகே பரபரப்பு

நெல்லை: சங்கரன் கோவிலை அடுத்த குருவிகுளம் தனியார் மெட்ரிக் பள்ளியை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளை பள்ளியின் நிர்வாகி தாக்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியராக சரவணன் இருந்து வருகிறார். பள்ளிக்கூடம் இருக்கும் இடம் தொடர்பாக சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் பள்ளி கட்டிடம் உள்ள இடம் கோவில்பட்டியை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கோர்ட் அதிகாரிகள் முத்துராஜ் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு சென்றனர்.

அங்கு பூட்டியிருந்த அறையை திறந்து ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். பின்னர் அவற்றை கோர்ட் அதிகாரிகள் குருவிகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த பள்ளி நிர்வாகி கோர்ட் அமீனாவை என்னை கேக்காமல் எப்படி ஆவணத்தை கைப்பற்றலாம் என கூறி அவரை காவல் நிலையத்தில் வைத்தே சராமாரியாக தாக்கினார். இதை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரையும் அவர் தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட சரவணனை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக கோர்ட் அமீனா முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் சரவணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்வம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: OneIndia