அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் வெளியிடப்படும்: அருண் ஜேட்லி

அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் வெளியிடப்படும்: அருண் ஜேட்லி

டெல்லி: அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் விநியோகம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கியிடம் போதிய அளவு பணம் கையிருப்பு உள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்றார்.

மேலும் நாட்டில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் வரி அதிகளவில் வசூலிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பால் என்ன பலன் கிடைக்கும் என்பது தற்போது கண்கூடாக தெரிகிறது. அனைத்து துறைகளிலும் மறைமுக வரி குறிப்பிடத் தகுந்த அளவு அதிகரித்துள்ளது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் நேரடி வரி வசூலிப்பு 14.4 சதவீதமாகவும், மறைமுக வரி 26.2 சதவீதமாகவும், மத்திய வரி 43.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்றார்.

Source: OneIndia

Author Image
murugan