ஊழியர் மரணத்திற்கு பொறுப்பேற்று நிறுவன தலைவர் ராஜினாமா

ஊழியர் மரணத்திற்கு பொறுப்பேற்று நிறுவன தலைவர் ராஜினாமா

டோக்கியோ:

ஜப்பானின் முன்னணி விளம்பரக் கம்பெனியான டென்ஷுவில் பணியாற்றியவர் மட்சுரி டகயாஷி (24). டென்ஷு நிறுவனத்தில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்த மட்சுரி பணிக்கு சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் 100 மணி நேரங்கள் ஓவர்டைம் பார்த்திருக்கிறார்.

பணிச்சுமை காரணமாக கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் மட்சுரி தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் தனது சமூக வலைதளத்தில் மட்சுரி “நான் இறக்கப் போகிறேன். உடல் மற்றும் மன ரீதியாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.  

இந்நிலையில் மட்சுரி இறந்து ஓராண்டு முடிவுற்ற நிலையில் டென்ஷு நிறுவன தலைவர் டடாஷி இஷு, மட்சுரி மரணத்திற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

பணிச்சுமை காரணமாக ஆண்டொன்றுக்கு 2000 பேர் இறப்பதாக ஜப்பான் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Maalaimalar

Author Image
murugan