Press "Enter" to skip to content

தனது ஊழலை மறைக்கவே ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு: மோடி மீது காங். குற்றச்சாட்டு

கொல்கத்தா:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கியது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ஊழல்களை மறைத்திடவே ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் என்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஹீல் அகமது குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து சஹீல் அகமது கூருகையில் “ஷீலா தீட்சித்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது எந்த விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் பிரதமர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அஞ்சுகிறார்.பிரதமர் மோடி மீது ஒரு பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி வெளியிடக் காரணமே எதிர்க்கட்சிகளுக்கு தனது சொந்த ஊழல் விவகாரங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதால் தான். வங்கிகளில் பணக்காரர்களுக்குப் பதிலாக ஏழைகளின் பணமே மாட்டிக்கொண்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் செய்ததுபோல ஏழை விவசாயிகளின் கடனை மோடி அரசாங்கம் ஏன் தள்ளுபடி செய்ய முன்வரவில்லை. மோடியின் இந்த நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியும் சமரசம் செய்து கொண்டுள்ளது” என்றார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.