Press "Enter" to skip to content

உ.பி. தேர்தல்: சமாஜ்வாடி – காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படும்- லாலு நம்பிக்கை

பீகார் சட்டசபை தேர்தலில் பா. ஜனதாவை தோற்கடிக்க நிதிஷ் குமார், லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சி ஒரே அணியில் திரண்டன. இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் பா. ஜனதா தோல்வியைத் தழுவியது. அதேபோல் உ.பி. தேர்தலிலும் சமாஜ்வாடி – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முலயம் சிங் நேற்று அதிரடியாக 325 வேட்பாளர்களை அறிவித்து, தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என்று லாலு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து லாலு கூறுகையில் ‘‘சமாஜ்வாடி – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்படும் நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து பா. ஜனதாவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்’’ என்றார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.