காலியாக இருக்கும் முன்பதிவு சீட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி: ரெயில்வே

கட்டணம் குறைவு, பாதுகாப்பான பயணம் போன்ற வசதிகளுக்காக பொதுமக்கள் அதிக அளவில் ரெயில் பணத்தை பயன்படுத்துகின்றனர். கோடடைக்கால சீசன் மற்றும் விழாக்காலங்களில் சுமார் 90 நாட்களுக்கு முன்பே அனைத்து படுக்கை வசதி மற்றும் ஏ.சி. வசதி கொண்ட சீட்டுகள் முன்பதிவு ஆகிவிடும்.

சீசன் அல்லாத நேரங்களில் மெயில்/எக்ஸ்பிரஸ் ரெயில்களின் படுக்கை வசதி மற்றும் ஏ.சி. சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே செல்லும். அப்போது ரெயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த நஷ்டத்தை குறைக்கும் வகையில் காலியாக உள்ள சீட்டுகள் ரிசர்வேசன் சார்ட் இறுதி செய்தபின் 10 சதவீத கட்டணம் தள்ளுபடியுடன் அளிக்கப்படும் என்று ரெயில்வேத்துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜனவரி 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரிசர்வேசன் மற்றும் சூப்பர் பாஸ்ட் போன்றவைக்கான அனைத்து கட்டணங்களும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளரது.

Source: Maalaimalar