Press "Enter" to skip to content

நவ. 8-ந்தேதிக்குப்பின் 105 கோடி ரூபாய் புதிய பணம் பறிமுதல்: வரிமான வரித்துறை

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அந்நாளில் இருந்து பணத்தை பதுக்கும் நடவடிக்கை அதிக அளவில் நடைபெற்றது. இதனால் வரிமான வரித்துறை நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டது.

இதில் கணக்கில் வராத பணம், புதுப்பணம் என கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணம் 1000 ஆயிரம் கோடித் தாண்டியுள்ளது.

நவம்பர் 8-ந்தேதிக்குப்பின் இன்றுவரை வருமானவரித்துறை பறிமுதல் செய்துள்ள ரொக்க பணத்தின் விவவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் வரிமான வரியில் காட்டப்படாத 4172 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 105 கோடி ரூபாய் புதிய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 458 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது’’ என்று அறிவித்துள்ளது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »