Press "Enter" to skip to content

சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்

புதுடெல்லி:

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அந்நாளில் இருந்து பணத்தை பதுக்கும் நடவடிக்கை அதிக அளவில் நடைபெற்றது. இதனால் வருமான வரித்துறை நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டது.

இதில் கணக்கில் வராத பணம், புதுப்பணம் என கோடிக்கணக்கில் நாள் தோறும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பஸ்தார் பகுதியில் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்தை எடுப்பதற்காக கட்டுப்பாடுகள் நாளை டிசம்பர் 30-ம் தேதி உடன் முடிவடையும் நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.