அதிமுக பொதுச்செயலாளராக டிச.31ல் பொறுப்பேற்கிறார் சசிகலா?

அதிமுக பொதுச்செயலாளராக டிச.31ல் பொறுப்பேற்கிறார் சசிகலா?

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 31ல் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை எற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று தீர்மான நகலை முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவிடம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 31 ஆம் தேதி சசிகலா கட்சியின் தலைமைப் பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்க உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: OneIndia

Author Image
murugan