திவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய "வலது கரம்" ஆனார்!

திவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய "வலது கரம்" ஆனார்!

சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு வலது கரம் யார் என்ற அதிகாரப் போட்டியில் திவாகரனை வீழ்த்தியிருக்கிறார் டிடிவி தினகரன். அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் கை ஓங்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மன்னார்குடி கோஷ்டியிலேயே மென்மையான ஒருவராக அதிமுகவினரால் நம்பப்பட்டவர் டிடிவி தினகரன். இவர் சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இந்த உச்சத்துக்கு கொண்டுவந்தவரும் இவர்தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை பொதுச்செயலராக்கிவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி முழு வீச்சில் இறங்கி காய்களை நகர்த்தியது. அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்களை அடையாளம் கண்டு பேச்சுவார்த்தை நடத்தி கார்டனுக்கு கொண்டு வந்ததும் தினகரன்தான்.

பொதுச்செயலர் பதவிக்கு அடிதடி

மத்திய அரசின் கடும் நெருக்கடியால் பொதுச்செயலர் பதவியை ஏற்க ரொம்பவே தயங்கினார் சசிகலா. அப்போது தினகரன் தம்மை பொதுச்செயலராக்குங்கள் என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் சசிகலாவின் தம்பியான திவாகரன் தனக்குதான் பொதுச்செயலர் பதவி தர வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.

தினகரன் மும்முரம்

தினகரன் மும்முரம்

இதனிடையே பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சீனியர் அதிமுக தலைவர்களும் இப்பொழுதே பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டாம் என கூறியிருந்தனர். ஆனால் தினகரன்தான் பொதுக்குழு தொடங்கி தீர்மானங்கள் வரை ‘ஜாதகப்படி’ பார்த்து நடத்தியிருக்கிறார். தினகரனுக்கு அதிமுக நிர்வாகிகள் கொடுத்த ஒத்துழைப்பு திவாகரனுக்கு கிடைக்காமல் போனது.

டாக்டர் வெங்கடேஷ்

டாக்டர் வெங்கடேஷ்

இதனால் அதிகாரப் போட்டியில் இருந்து திவாகரன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. தினகரனுடன் கை கோர்த்து செயல்பட்டது டாக்டர் வெங்கடேஷ். இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன். தற்போது அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டாலும் தினகரன், டாக்டர் வெங்கடேஷ் இவர்கள் கைதான் ஓங்கியிருக்கிறது. இனி இவர்கள்தான் அதிமுகவை ‘வழிநடத்துவார்கள்’.

புதிய வலது கரம்

புதிய வலது கரம்

போயஸ் கார்டனில் நேற்று சசிகலா கண்ணீர்விட்டு அழுது அரங்கேற்றிய நாடகத்தில் டச்சிங்காக கர்ச்சீப்பை எடுத்து கொடுத்து அசத்தினார் டிடிவி தினகரன். ஆம் பெயருக்குதான் சசிகலா பொதுச்செயலர்… இனி அதிமுகவில் எல்லாமுமே டிடிவி தினகரன்தான் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

Source: OneIndia

Author Image
murugan