முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தி விபத்தில் பலி!

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தி விபத்தில் பலி!

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி வைகுண்டத்தின் பேத்தி திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 26.

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி வைகுண்டத்தின் மகன் கலைவாணன் ஆவர். மருத்துவரான இவர் ஆலடி அருணாவின் நினைவு நாளையொட்டி நாளை நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கு சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டார்.

கலைவாணன் காரை தானே ஓட்டியுள்ளார். இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த கலைவாணன், அவரது மனைவி பாலாம்பிகை மகள் பிரியதர்ஷினி அவரது ஒன்றரை மாத குழந்தை அத்வைதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 26 வயதான பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.பிரியதர்ஷினியின் உடலை பார்த்து ஆலடி அருணாவின் மகளும் எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை கண்ணீர் விட்டு கதறி அழுதார். நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது நடந்த இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: OneIndia

Author Image
murugan