பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் அழித்துவிட்டார்: மம்தா

பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் அழித்துவிட்டார்: மம்தா

கொல்கத்தா:

சஹாரா நிறுவன மோசடியில் நடிகர்கள்,கிரிக்கெட் வீரர்களுக்கு கூட தொடர்பு உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தூங்கிகொண்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.  ரூ.50,000 கோடி பிரில் குழு நிதி நிறுவன மோசடியில் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது.

பணத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும் என நான் நம்புகிறேன். ஆனால் மக்களின் இயல்பு நிலை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா? கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று உறுதி மொழி கூறிய பிரதமர் மோடி அதனை மீட்காதது ஏன்?  கறுப்புபணம் ஒழிப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.  பிரதமர் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் அழித்துவிட்டார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பணத்தட்டுப்பாடு குறித்து போராட்டம் நடத்திய போது அவர்களை சிபிஐ வைத்து கைது செய்தது நியாமில்லாதது.  திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள்,எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கைது செய்து கொள்ளுங்கள்.

அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Source: Maalaimalar

Author Image
murugan