புலிகளை பிடிக்கும் முயற்சியில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புலிகளை பிடிக்கும் முயற்சியில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நகரஹோல் புலிகள் சரணாலயத்தில் இருந்து ஒரு புலி தனது மூன்று குட்டிகளுடன் ஹோசாஹோலாலுவில் இருந்து 2.5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அன்டாராசான்டே கிராமத்தில் உள்ள பலத்தோட்டத்தில் நுழைந்ததது.

அந்த புலிகளை வனபாதுகாப்பு அதிகாரிகள் உள்ளூர் மக்களுடன் தேடிவந்தனர். அப்போது குட்டிப்புலி ஒன்று உள்ளூர் வாசியான மூர்த்தி மீது பாய்ந்தது. இதனால் அதிகாரிகள் புலிக்குட்டியை பெல்லெட் குண்டுகள் நிரப்ப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் மூர்த்தி மார்பு மீது குண்டுகள் தவறுதலாக பாய்ந்தன. இதில் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கெம்பையா மற்றும் மகேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Source: Maalaimalar

Author Image
murugan