மாநில தேர்தல் முடிவு பண நடவடிக்கைக்கு கிடைத்த சாட்சி: அமித் ஷா

மாநில தேர்தல் முடிவு பண நடவடிக்கைக்கு கிடைத்த சாட்சி: அமித் ஷா

பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். மோடியின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், மக்கள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது என்று பா.ஜனதா கூறி வருகிறது.

இந்நிலையில் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மோடியின் முடிவுக்கு மாநில தேர்தல்களின் முடிவே தக்க சாட்சி என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அமித் ஷா கூறுகையில் ‘‘மோடியின் நடவடிக்கைக்கு மக்கள் தக்க சான்றிதழ் வாங்கியுள்ளனர். ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, சண்டிகார் மற்றும் சத்தீஷ்கார் போன்ற மாநிலத்தில் நடைபெற்ற உள்ளூர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதனால் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மக்கள் மோடியின் பின் நிற்கிறார்கள்’’ என்றார்.

Source: Maalaimalar

Author Image
murugan