ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது

ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் வினய்குமார். அவர் ஆய்வுக்கு சென்ற போது ஒருவரிடம் வருமான வரி தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும், அதற்காக தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சி.பி.ஐ. அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரில் அந்த நபர், வினய் குமாரிடம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், வினய் குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக வினய் குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Source: Maalaimalar

Author Image
murugan