விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கடந்த 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வழக்கை தொடர்ந்தார்.

கடந்த 9 வருடங்களாக இந்த வழக்கு விசாரணையில் இருந்தது. வழக்கை தொடர்ந்தவர் முறையாக வழக்கை நடத்தவில்லை என்றும், வழங்கப்பட்ட வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் இந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்வதாக மாஜிஸ்திரேட்டு சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விஜயகாந்த் நேரில் கோர்ட்டில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் சார்பாக வக்கீல் சந்தோஷ்குமார் ஆஜரானார்.

Source: Maalaimalar