பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை இனி இங்கு மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும்! மார்ச் 31வரை கெடு

பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை இனி இங்கு மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும்! மார்ச் 31வரை கெடு

டெல்லி: செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

கடைசி நாளான நேற்று வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் வங்கிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார்.

மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் மோடி கூறியபடி, வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தாலும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை இவ்வளவு நாட்கள் ஏன் வைத்திருந்தீர்கள் என்பதற்கான உரிய காரணத்தை கூறி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே இனிமேல் வங்கிகளில் கூட்டம் குறைந்து, மாநில தலைநகரங்களிலுள்ள ரிசர்வ் வங்கி கிளைகளில் மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்கலாம்.

Source: OneIndia

Author Image
murugan